உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும் ஜாதி காரணமாக சம்மதிக்கவில்லையாம். அதனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று உள்ளார்கள். பின்பு குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து சூரஜ் குடும்பத்தினர் மூன்று மாதங்களுக்கு முன்பாக அவருக்கு வேறு திருமண செய்து வைத்துள்ளார்கள்.

ஆனாலும் சூரஜ் தன்னுடைய காதலி நிஷாவை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சூரஜ் மனைவி தன்னுடைய கணவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாம்பழ மரத்தில் சூரஜூம், நிஷாவும் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கிடந்துள்ளார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.