
சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆரோக்கியதாஸ், நிஷாந்தி (31) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் மிகவும் பத்திரமாக குழந்தையை கவனித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுடைய வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தான் ஒரு அரசு அதிகாரி என்றும் என்னுடன் வந்தால் நிதி உதவி பெற்று தருவதாகவும் கூறி நிஷாந்தியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிஷாந்தி சாப்பிட்டுவிட்டு கை கழுவு சென்றபோது அந்த பெண் குழந்தையை தூக்கிவிட்டு ஓடிவிட்டார். தன் குழந்தை மாயமானதால் கதறி அழுத நிஷாந்தி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் குழந்தையை மீட்டனர்.
பின்னர் குழந்தையை கடத்திய பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையை கடத்திய தீபாவையும் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தீபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது தீபா ஹரியை மூன்றாவதாக திருமணம் செய்த நிலையில் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவுக்கு தோழி ஒருவர் கண்ணகி நகர் பகுதியில் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் குழந்தையை வாங்கி வளர்க்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் மற்றும் தீபா இருவரும் அந்த பகுதிக்கு சென்ற நிலையில் நிஷாந்தியின் குழந்தையை அவர்களுக்கு பிடித்து விட்டது. ஆனால் அவர்களுக்கு 13 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பதால் கொடுக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு தெரியாமல் திட்டம் போட்டு குழந்தையை கடத்தியுள்ளனர். இவர்களை தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.