
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாபூர் பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹபீஸ் போர் காவல் நிலையத்தில் நிர்மலா என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடன் நவீன் கள்ள உறவில் இருந்த நிலையில் திருமணமான இரண்டாம் நாளில் இவர்களுடைய கள்ளக்காதல் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தன் கணவனை கண்டித்தார். இதனால் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி நவின் நிர்மலாவுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
பின்னர் அவர் நிர்மலாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய முதல் மனைவியுடன் அவரை ஒரே வீட்டில் தங்க வைத்தார். இது நவீனின் மனைவிக்கு பிடிக்காததால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதாவது அவருடைய கணவர் நிர்மலாவுடன் நெருக்கமாக இருந்த நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த விவரத்தை தெரிந்து கொண்ட நவீன், நிர்மலா மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் தலைமறைவாகி விட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.