கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பஷீர் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி பாஹர் அஸ்மா என்ற 29 வயது மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பஷீர் ஒரு இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது அஸ்மாவுக்கு தெரிய வந்ததால் தன்னுடைய கணவரை அவர் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பஷீர் வெளியே சென்று இருந்தார். அப்போது அஸ்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அஸ்மா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பஷீர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.