
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்க பள்ளபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாகார்ஜுனா என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தை சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண்ணை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் பெற்றோர் ஒப்புக்கொண்ட நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இருப்பினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன்னுடைய காதல் கணவருடன் செல்வதாக இளம் பெண் கூறிய நிலையில் தற்போது இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் திடீரென போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்டதால் என் தாய்க்கு உடல்நலம் சரியில்லை. எனவே காதல் கணவரை பிரிந்து பெற்றோருடன் செல்கிறேன் என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.