தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி ஆவணப்படம் சமீபத்தில் netflix ஓடிடி தளத்தில் வெளியான போது ‌ நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் பட காட்சியை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதால் நடிகை நயன்தாரா அவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு இன்டர்நேஷனல் சேனலுக்கு அனுப்பமா சோப்ரா என்பவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் பிரபு தேவாவை காதலித்ததற்கான காரணம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் பலரும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார்கள். அதோடு திருமணமானவரை காதலிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டார்கள். திருமணமானவரை காதலிப்பது இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது போன்றவற்றையெல்லாம் பார்த்த போது எனக்கும் திருமணம் ஆன ஒருவரை காதலிப்பது தவறு என்று தோன்றவில்லை.

அதனால்தான் பிரபுதேவாவை காதலித்தேன் என்று அவர் கூறியுள்ளார். நயன்தாராவின் இந்த பதில் நெட்டிசன்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் தனுஷ் பற்றி கேட்டபோது நானும் தனுஷும் பரம எதிரிகள் கிடையாது. அந்த 10 வருடங்களாகத்தான் இந்த நானும் ரவுடிதான் படத்தால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதற்கு முன்பு வரை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று கூறியுள்ளார்.