
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி வி பிரகாஷ். கடந்த 2013ஆம் வருடம் பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இவர்களின் விவகாரத்துக்கு திவ்யபாரதி தான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் திவ்ய பாரதி.
அதில் “ஜிவி பிரகாஷ் குடும்ப விவகாரத்தில் எந்த விதமான தொடர்பும் இல்லை. வெளிப்படையாக சொன்னால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன். நிச்சயமாக திருமணமான ஆணோடு இல்லை. ஆதாரம் அற்ற வதந்திகளை நம்புவது என் கவனத்தை ஈர்க்கவில்லை. இதுவரை அமைதியாக இருந்தேன் .இது ஒரு எல்லையை தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். இந்த விஷயத்தில் இதுவே என்னுடைய முதல் மற்றும் இறுதி அறிக்கை” என்று கூறினார்.