மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் நிக்கம் (30). இவர் பிரபலமான மல்யுத்த வீரர். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர் தன் மனைவியுடன் சங்கிலி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுராஜ் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவருடைய செல்போனுக்கு உறவினர்கள் நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.