தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஐபோன் உதிரி பாகங்கள் தயார் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாது என ஒரு செய்தி தீயாக பரவிய நிலையில் இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியது.

இந்நிலையில் தற்போது பாக்ஸ்கான் நிறுவனம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது, திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்ற கொள்கை எங்கள் நிறுவனத்தில் கிடையாது. வேலைக்கு தேர்வாகாத சிலர் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கிளப்பி விடுகிறார்கள். இது மாதிரியான பொய் குற்றசாட்டுகள் எங்கள் நிறுவனத்தை தான் பாதிக்கும். மேலும் பாதுகாப்பு கருதி ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பாலினத்தவர்களும் தங்கம் உள்பட எந்த உலகப் பொருட்களையும் அணியக்கூடாது என்ற ஒரே ஒரு விதி மட்டும் தான் எங்கள் நிறுவனத்தில் பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளனர்.