
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எஸ். குருப்பட்டி கிராமத்தில் மாதேஷ் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவர் அஞ்சலி என்ற 29 வயது பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது மாதேஷின் மனைவி நேத்ராவுக்கு தெரிய வந்ததால் குடும்பத்துடன் ஓசூருக்கு குடி பெயர்ந்தார். இருப்பினும் மாதேஷ் தொடர்ந்து தன்னுடைய கள்ளக்காதலை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி திடீரென அஞ்சலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாதேஷிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர்.
மேலும் தன்னுடைய கள்ளக்காதலி இறந்த செய்தி அறிந்து மாதேஷ் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதாவது கெலமங்கலம் அருகே அவர் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அந்தபகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.