ஜார்க்கண்டை சேர்ந்த அஞ்சலி குமார் என்ற பெண் தர்மன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் தர்மன் அஞ்சலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அஞ்சலி தர்மனை கொலை செய்ய முடிவு செய்தார். இதை அடுத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு தர்மனை வரவழைத்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு தர்மன் அந்த இடத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஞ்சலி கோடாரி ஒன்றை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த தர்மனை தாக்கி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து அஞ்சலி குமாரை கைது செய்துள்ளனர்.