திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில் பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த காதல் நாளடைவில் நெருக்கமாக மாறிய நிலையில் திருமண ஆசை காட்டி மாணவியை ரவிச்சந்திரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததால் திடீரென மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் பெற்றோர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததால் அதிர்ச்சியில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.