மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் ராமன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ராமன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமான நிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு ராமன் கருவில் இருக்கும் குழந்தையை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதை நம்பி அந்தப் பெண் கருவை கலைத்த நிலையில் அதன் பெண் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து இளம் பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த ராமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதைத்தொடர்ந்து தற்போது வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ராமனை கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். அந்த சமயத்தில் இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் ‌ ராமனின் உறவினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் காவல் நிலையத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.