
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் பல்லடத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து சரண்யாவிடம் பேசுவதற்காக தொலைபேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் பக்கத்து வீட்டில் உள்ள நபருக்கு தொலைபேசியில் அழைத்து சரண்யாவை பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது அந்த நபர் சரண்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து சரண்யாவின் பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் அந்த நபர் தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த சரண்யாவை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.