நடிகை குஷ்பூ சுந்தர் சியை கடந்த 2000 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 25 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய 25வது திருமண நாளில் கணவரோடு குஷ்பூ முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். சுந்தர் சி மொட்டையடித்துள்ளார். குஷ்பூ தனது திருமணத்தன்று அணிந்திருந்த அதே பட்டு புடவையை அணிந்து கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து குஷ்பூ பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், இன்றைய நாள் 25வது திருமண நாளை கொண்டாட சுற்றுலா செல்ல நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் அவரோடு இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்  முருகன் என நம்புகிறேன். அதிகாலை பூஜையில் கலந்து கொண்டது கடவுளின் அருள். எங்களுடைய பயணத்தை தொடர இதை விட சிறந்த வழி இருக்காது” என்று தெரிவித்துள்ளார். 25வது திருமணநாளில் முருகன் கோவிலில் சுந்தர் சி மொட்டை  அடித்திருப்பதால் திருமணநாளுக்கான வேண்டுதலா இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.