
சினேகன் தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களை எழுதியுள்ளார். 2500 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது சினேகன் கன்னிகா இருவரும் தங்களது மூன்றாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள். அப்போது சினேகன் – கன்னிகா இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விட்டதாக கூறியுள்ளனர். அப்போது சினேகன் குழந்தையை பற்றி கூறியதும் கன்னிகா வெட்கத்தில் ரியாக்சன் கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.