
எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிடாமா பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லாரியில் 70-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.
இந்த லாரி ஆற்று பாலம் மீது லாரி சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. மேலும் இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்