குஜராத் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் சத்ய பிரகாஷ் பாண்டே (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு மோகினி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், மோகினிக்கு சுரேஷ் என்ற காதலன் இருந்துள்ளார்.

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தின் போது மோகினி தன்னுடைய  காதலனை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த நிலையில் இது ஹரிராமுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனை ஹரிராம் கண்டித்துள்ள நிலையில் சுரேஷ் மீதான காதலை கைவிட வேண்டும் என்றும் அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று மோகினியிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் மோகினி என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினர் மீதும் வரதட்சணை புகார் கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஹரிராம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.