கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று அங்குள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அந்த திருமண பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு புதுமண தம்பதிகளை படம் எடுத்து காவலர் whatsapp குரூப்பில் பதிவிட்டுள்ளார்.

அப்பொழுது அந்த குரூப்பில் ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக கமெண்ட் வந்த நிலையில் அந்த பெண் திருமண பெண் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்போதே பெண் வீட்டார் ராஜேஷ் வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .போலீஸ் நடத்திய விசாரணையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது.  பெற்றோர் இறந்து விட்டார்கள் உறவினர்கள் யாரும் இல்லை என்று சொல்லி ராஜேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.