விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் அவர் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமா இல்லையா என்பது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இது குறித் அவர் கூறியதாவது, மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விசிக கட்சியின் சார்பில் முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஒருவேளை அப்படி முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசி ஆலோசனை நடத்தப்படும். மேலும் அதன் பிறகு மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.