கடந்த 2019ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்றத்தை கலக்கிய 6 தோழிகள் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில்  இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சரத் பவர் மகள் சுப்ரியா சுலேவும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

மேற்கு வங்கதிலிருந்து திருணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவும், உ.பி., அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஆகிய ஆறு பேரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில் 2014ம் ஆண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.