திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

நேற்று காலை 6 மணி அளவில் கிரிவலம் வந்த 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் வேலூர் ரோடு அருகே சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.