திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருவள்ளூர் ஆட்சியர் மீது 2 மாதங்களில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது
பட்டா மாற்றம் செய்து தரக்கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காத வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்பெயர் மாற்றம் கோரி கோவிந்தராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டா மாற்றம் செய்து தரக்கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காதது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த நீதிமன்றம், இருவர் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கையை ஜனவரி 30 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.