நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மேலூர் பகுதியில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக 15 வயதுடைய தமிழ்த்துரை என்ற சிறுவன் பெற்றோருடன் சென்றுள்ளார்.

அப்போது தமிழ் துறை எதிர்பாராத விதமாக திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து தமிழ்த்துரை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்முன்னே மகன் துடி துடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.