
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது.
அப்போது கழுகு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. மரம் ஏறும் இளைஞர்களுக்கு உதவ கீழே சில இளைஞர்கள் நிற்பார்கள். அந்த வகையில் சுப்பிரமணி (30) என்பவர் மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது நெஞ்சு வலி ஏற்பட்டது . இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.