
சென்னை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் தெற்கு மண்டல மேலாளர் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக வேளச்சேரியைச் சேர்ந்த சுந்தர் மோகன் மாஜி வேலை பார்த்தார்.
அதே வங்கியில் மயிலாப்பூர் சேர்ந்த ஜெய்சிங் எழுத்தராக வேலை பார்த்தார். இருவரும் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்கு தெரியாமலேயே போலியாக கையெழுத்து போட்டு எடுத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் மறைந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கையாடல் செய்வது, அனுமதி இல்லாமல் வாடிக்கையாளர்களின் பெயரில் வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்டு 23.48 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தர் மோகன் மாஜி, ஜெய்சிங் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.