தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வெளியே வந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக அண்ணாமலை பேசியதாவது, நீ சரியான அம்மா அப்பாவுக்கு பொறந்திருந்தால் என் மேல கேஸ் போடு பார்க்கலாம். நான் தெளிவாக கேட்கிறேன் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை பார்க்கணும். ஜெயிலில் இருக்கும் ஒருவர் சொல்லி செய்கிற அளவுக்கு அரசியல் அவ்வளவு மோசமாக இருக்கிறதா. நீ சரியான ஆளா இருந்தா என் மேல கேஸ் போடுயா போடு நான் பாத்துக்குறேன். போலீஸ் உங்க கையில இருக்கிறது. நீங்க எங்க கூட்டிட்டு போவீங்க நானும் பாத்துடறேன். இந்த உருட்டல் மிரட்டல் ‌ என் மேல. நான் அறிக்கை வெளியிட்டால் என் மேல கேஸ் போடுவாங்களாம்.

நீ எல்லாம் என் மேல கேஸ் போட்டு அதாவது அமலாக்கத்துறை வழக்கில் ஜெயிலுக்கு போயிட்டு வந்த நீ எல்லாம் என் மேல கேஸ் போட்டு ‌ அதை என் கையில் வாங்குற அளவுக்கு எனக்கு தலை எழுத்து. நான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போய் தனியா படிக்கிறேன் யார்கிட்டயாவது சொன்னேனா. அந்த பல்கலைக்கழகத்தில் யாரையாவது தனியா வைத்து கிளாஸ் நடத்துவாங்களா. அவர் கூட போன 11 பேர் ரகசியம் எனக்கு தெரியும். வெப்சைட்ல போய் டைப் பண்ணா தெரியப்போகுது. நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அதே நேரத்தில் இந்த அமைச்சரும் படித்தார். அவர் எங்கே படித்தார் புழல் சிறையில் கம்பி எண்ணுவதை பற்றி படித்தார். அவர் ஒரு பக்கம் படித்தார் நான் ஒரு பக்கம் படித்தேன். பெயிலான மாணவன் பாஸ் ஆன மாணவனை பார்த்து பொறாமைப்படுவது இயல்புதான். அந்த கம்பி என்ற அமைச்சர் என்னை பார்த்து பொறாமைப்படுகிறார். கேட்ட கேள்விக்கு பதில் வரணும். அதானிக்கு குடுத்தியா இல்லையா. அதை மட்டும் சொல்லு.

உண்மையை சொல்லாமல் சுத்தி சுத்தி ‌ சொல்ற வேலை எல்லாம் என்கிட்ட ஆகாது. அந்த ஜாமின் அமைச்சருக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும். சரியான அம்மா அப்பாவுக்கு பிறந்திருந்தால் என் மேல கேஸ் போடு. நியாயத்தை பேசினால் மிரட்டல். கேட்டால் அமைச்சர் பதவி. மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு ஆள். இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. உங்களுக்கு எல்லாம் பயந்திருந்தால் நான் ஊரில் ஆடுமாடு வைத்துக் கொண்டிருப்பேன். இங்க வந்து உங்க கூடலாம் அரசியல் செய்திருக்க மாட்டேன். இந்த மாதிரி ஆளுங்கள ஓட விடனும் என்பதற்காக தான் நான் தவம் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறினார். மேலும் அதானி விவகாரத்தில் உண்மையை சொல்லாமல் நான் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்திற்கு சென்று வந்ததை பற்றி தேவையில்லாமல் பேசுகிறார் என்று செந்தில் பாலாஜியை விமர்சித்தார்.