தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் நடிகை ஓவியா மது குடிக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் என்னதான் தைரியமான ஒரு நடிகையாக இருந்தாலும் இப்படியா மது குடிப்பதை ஓபனாக சொல்ல வேண்டும் என்ற பலரும் கூறி வருகிறார்கள்.