தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது படத்தின்  இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.