
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினையும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அதாவது தி கோட் படம் மற்றும் முதல் மாநாடு இரண்டும் வெற்றிபெடைய வேண்டி அவர் சீரடி கோவிலுக்கு வழிபடுவதற்காக சென்றுள்ளார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார். மேலும் நடிகர் விஜயின் முதல் மாநாடு மற்றும் கோட் படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் அவருடைய ஆன்மீகப் பயணமும் கவனத்தை ஈர்த்துள்ளது.