திருநெல்வேலியில் உள்ள வி.கே பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் விஜய் நடித்த தி கோட் மற்றும் ரஜினி நடித்த வேட்டையன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோட் படத்தை பார்க்க 25 ரூபாயும் வேட்டையன் திரைப்படத்தை பார்க்க 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்த  நிலையில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்த விசாரணையில் மாணவிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக படங்கள் ஒளிபரப்பப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.