தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி 250 பேருந்துகளும், நவம்பர் 10 750 மற்றும் நவம்பர் 11 520 பேருந்துகள் இயக்கப்படும் என கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே திருச்சியில் இருந்து மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மதுரை , கோவை , திருப்பூரில் இருந்து முக்கிய இடங்களுக்கும் நவம்பர் 9ம் தேதி 100 பேருந்துகளும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 250 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் தீபாவளி முடிந்து நவம்பர் 12 முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மக்கள் திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையத்தளம் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.