
ஆக்ட் ஃபைபர்நெட் தனது வாடிக்கையாளர்களுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தமில்லாமல் ஒரு சூப்பர் ஆஃபரை கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தனது பயனர்களுக்காக இன்டர்நெட் ஸ்பீடை இலவசமாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பயனர்கள் தங்கள் தற்போதைய திட்டத்தின் அடிப்படையில் உயர்ந்த அதிவேக இண்டர்நெட்டினை அனுபவிக்க முடியும். இந்த சலுகை அக்டோபர் 31, 2024 வரை நீடிக்கும்.
தற்போது 100 எம்பிபிஎஸ்-க்கும் குறைவான திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களின் இன்டர்நெட் ஸ்பீடு, இந்த ஆஃபரின் கீழ் 100 எம்பிபிஎஸ் ஆக மாற்றப்படும். இதேபோல், 100-300 எம்பிபிஎஸ் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகம் வழங்கப்படும். மேலும் 300-500 எம்பிபிஎஸ் திட்டங்களில் உள்ளவர்களுக்கு 500 எம்பிபிஎஸ் வேகம் கிடைக்கும். இதற்காக பயனர்கள் எதையும் செய்யத் தேவையில்லை, அவர்களின் சலுகை தானாகவே செயல்படுத்தப்படும்.
இந்த சலுகையை அனுபவிக்க, வாடிக்கையாளர்கள் ACT Fibernet ஆப்பை பதிவிறக்கம் செய்து, தங்கள் கணக்கில் லாக்-இன் செய்ய வேண்டும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேகமான இன்டர்நெட்டுடன், கேமிங், ஸ்ட்ரீமிங் மற்றும் பிற ஆன்லைன் செயல்பாடுகளை விரைவாக முடிக்க விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும். ஆஃபரை பயன்படுத்திய பின்னர், பயனர்கள் புதிய இணைய வேகத்தை அக்டோபர் 31 வரை அனுபவிக்கலாம்.
இந்த சலுகை அனைத்து பிராந்தியங்களில் உள்ள ACT ஃபைபர்நெட் பயனர்களுக்கும் கிடைக்கிறது. அதோடு, இதற்காக எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறப்பான இணைய சேவையை வழங்க உறுதியாக உள்ளது.
ACT Fibernet இல் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்கள், ஓடிடி சந்தா மற்றும் நெட்பிளிக்ஸ் சேர்க்கைகளுடன் கூடியவை. வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகளை கூடுதல் கட்டணமின்றி அனுபவிக்க முடியும்.