
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக தீபாவளி என்றாலே அழைப்பு புத்தாடைகள் அணிவது, இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவது மற்றும் பட்டாசுகள் வெடிப்பது தான். இந்த மகிழ்ச்சியான பண்டிகையை முன்னிட்டு தற்போது பலரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைனில் மக்கள் பட்டாசுகள் வாங்க ஆரம்பி வருவதை சில மோசடி கும்பல் தவறாக பயன்படுத்துகிறது.
அதாவது குறைந்த விலைக்கு ஆஃபரில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக கூறி ஆன்லைனில் மோசடிகள் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் தொடர்பாக இதுவரை 7 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் ஆன்லைனில் மோசடிகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால்தான் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.