தமிழகத்தில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலமாக 499 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 15 மளிகை பொருட்கள் வழங்கப்படும் ‌ நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ரேஷன் கடைகளில் அமுதம் பல் பொருள் அங்காடியானது செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு அமைச்சர் சக்கரா பாணி அமுதம்பல் பொருள் ‌ அங்காடி மூலமாக ‌ ரேஷன் கடைகளில் 15 பொருட்களும் தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும் 15 பொருட்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, ‌

1. மஞ்சள் தூள் 50 கிராம்,
2. கடுகு-உளுத்தம் பருப்பு 125 கிராம்,
3. சீரகம் 100 கிராம்
4. வெந்தயம் 100 கிராம்
5. சோம்பு 50 கிராம்
6. மிளகாய் பொடி 250 கிராம்
7. தனியா (கொத்தமல்லி) 500 கிராம்
8. புளி 500 கிராம்
9. உளுந்தம் பருப்பு 500 கிராம்
10. கடலை பருப்பு 200 கிராம்
11. பாசிப்பருப்பு 200 g
12. வறுகடலை 200 கிராம்
13. பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகிய பொருள்கள் அடங்கும்.