
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
உள்துறை மந்திரி அமித்ஷா அமைதி நிலவுகிறது பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உறுதி கொடுத்தார். அவர் 370 சட்ட பிரிவை பயன்படுத்தி காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றி மகிழ்ந்தார். ஆனால் இந்த நிகழ்வு அங்கு பயங்கரவாதம் தொடர்கிறது என்பதை தான் உணர்த்துகிறது.
எனவே காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும். இதை நான் அரசியலுக்காக சொல்லவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக சொல்கிறேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கொள்கிறோம் என்று கூறிவிட்டு அப்பாவி பழங்குடியின மக்களை கொல்கிறார்கள். இது தொடர்பாக நக்சல் தலைவர்களுடன் கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது மிகவும் முக்கியமானது. நாட்டில் அமைதி இல்லாத சூழல் நிலவுவதற்கு கண்டிப்பாக மத்திய அரசுதான் பொறுப்பு. பாஜக வளர தொடங்கிய பிறகு அவர்களின் வகுப்புவாத அரசியல் இந்துக்களையும் முஸ்லிம்களையும் எதிரிகளாக மாற்றி வருகிறது.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே நடக்கும் முரண்பாடு என்பது ஏற்புடையது அல்ல. மேலும் இதனை மீண்டும் இந்து மற்றும் முஸ்லிம்கள் பிரச்சனை என்று பேசுவது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.