சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர்.  அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை காவல்துறையினர் விரட்டி சென்ற நிலையில் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் சோதனை நடத்தினர். அதில் 124 kg கஞ்சா இருப்பது தெரிய வந்த நிலையில் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தப்பி சென்று குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சமயபுரம் டோல்கேட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் வந்த சுபாஷ், துர்கா ராவ், அபிலேஸ் வர்மா, வித்யாசாகர், சண்டி பாபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனம் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் வித்தியாசாகர் என்பவர் ஆந்திர மாநிலத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஒரு காவலரின் மகன் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..