
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நேற்று முன்தினம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதில் மொத்தம் 10 கிலோ இருந்துள்ளது. அதன் பிறகு காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் பார்த்திபன் மற்றும் செல்வகணபதி என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.