செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் தீயில் எரிந்து நாசமாகியது. இதயறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

அத்துடன் அங்கே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள், தீ பற்றியதும் வெளியேறியதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.