கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ் தின்னரை சினேகா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடனே சினேகா ஓடி சென்று தனது கணவரை கட்டிப்பிடித்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சினேகா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.