
வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது எல்லா துணிகளையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது. வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்கள் துணிகளை, கைக்குட்டை மற்றும் உப துணிகளை தனியாக துவைக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் படுக்கை துணி, உள்ளாடைகள், துண்டுகளை தனியாக ஊற வைத்து துவைப்பது நல்லது.
புதிதாக வாங்கிய துணிகள் சாயம் போகும் என்பதால் மற்ற துணிகளோடு சேர்த்து துவைத்தால் அந்த சாயம் மற்ற துணிகளில் ஒட்டிக் கொள்ளும். துவைத்த துணிகளை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாக்டீரியாக்கள் இருந்தாலும் வெயிலில் அழியும்.