
சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுவதால் தொண்டர்கள் பலரும் இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் அறிவாலயத்தை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருக்கிறோம். மேலும் துணை முதல்வர் பதவி என்பது முழுக்க முழுக்க முதல்வரின் தனிப்பட்ட முடிவு என்று தெரிவித்தார்.