உத்திரபிரதேச மாநிலத்தில்  மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அதாவது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரால் பல பெண்கள் பாதிப்படைந்த நிலையில் அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில் மதுராவில் மனோஜ் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை சுட முயற்சி செய்தார். உடனடியாக காவல்துறையினர் மனோஜை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் இறந்தார். மேலும் அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்த 2 போலீஸ் ஏட்டுவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.