துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. எங்கு திரும்பினாலும் மரண ஓலங்களும் பிண துர்நாற்றமும் வீச தொடங்கியுள்ளது.

இதனால் அந்நாடுகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியதால் மீட்பு பணிகளை நிறுத்த துருக்கி திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து  நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.