சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த 10 வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆனால் இதனை மறைத்து அவர் திவ்யாவை திருமணம் செய்துள்ளார். அவருடைய தகாத உறவு திவ்யாவுக்கு தெரிய வந்த நிலையில் தன் கணவரிடம் தட்டிக்கேட்டார். இதனால் அவர் திவ்யாவை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதில் திவ்யா 45 நாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அவருடைய கர்ப்பத்தை கலைக்கும்படியும் வடிவேலு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட திவ்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புது மாப்பிள்ளை வடிவேலுவை கைது செய்துள்ளனர். திருமணமான குறுகிய காலத்தில் இப்படி தன் மனைவியை கணவன் வீட்டை விட்டு அடித்து துரத்திய சம்பவமும் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.