
தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகள் போக்குவரத்திற்கு முனையமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அங்குள்ள கடற்கரையில் அதிக வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில் இந்த துறைமுகத்தை விரிவுபடுத்தும் விதமாக மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 250 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஆனது. இதைத்தொடர்ந்து துறைமுகம் அருகே 4.74 ஏக்கர் நிலத்தில் மிக பிரம்மாண்டமான உணவகம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இப்பகுதி கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது . இதனால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த உணவகம் கட்டப்படுவதால் தூத்துக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இது உதவியாக இருக்கும் என பேசப்படுகிறது.