
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறைவாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல் திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் துறை வாரியான செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து போதை பொருளை தடுக்க முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.