துலாம் ராசி அன்பர்களே,

இன்று கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் தேடி வரும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளும் வரக்கூடும். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அனைவரும் உங்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடும். சிலர் உங்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவானாலும் இறுதியில் வெற்றி ஏற்படும்.

வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் துவங்குவதற்கான திட்டங்கள் மேலோங்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வெற்றியை கொடுக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இன்று எதையும் திட்டமிட்டு முன் யோசனையுடன் செய்வது நல்லது.

காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று மாணவர்கள் நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஐந்து
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்