துலாம் ராசி அன்பர்களே,
இன்று மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இரண்டு நாட்களாக இருந்த சிரமங்கள் விலகும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். ஆதாய பண வரவு ஏற்படும். சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். குடும்பத்தில் இருந்த எரிச்சல்கள் மாறும்.
நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெண்களுக்கு யோகமான நாளாகவே இருக்கும். செலவுகள் குறையும். இந்த நாள் இனிமையான நாளாக கொண்டாடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்ளுங்கள்.
தேர்வில் வெற்றி பெற முழு முயற்சி வேண்டும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பெரியோரை மதிக்க வேண்டும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்