தமிழக அரசு சிறப்பு பொது விநியோகி திட்டத்தின் மூலமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்த புள்ளிகள மீதான முடிவுகள் மேற்கொண்டு அவை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏறிட்டது.

ஜூன் மாதத்தில் கூடுதல் நுகர்வு காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் இதை ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று நடைபெற்று வரும் மானிய கோரிக்கையின் பொழுது உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஜூன் மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூலை மாதத்தில் பெற்று கொள்ளலாம் .இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.